ஐரோப்பாவில் இளம் ஆண் நண்பர்களோடு டூர்… ஏற்கனவே உடல் உறவு காரணமாக கற்பமாக இருந்த நிலையில். இந்த 18 வயதுப் பெண் பெற்ற குழந்தையை உடனே மாடியில் இருந்து வீசி எறிந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது !
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரு ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு பச்சிளம் குழந்தை ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 24 அன்று நடந்தது.
ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் இருந்து குழந்தை வீசப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் ஒரு 18 வயது அமெரிக்க பெண் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் ஐரோப்பாவிற்கு இளம் குழுவினருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர் எனவும், தனது ஹோட்டல் அறையில் குழந்தையைப் பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வீசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு குழந்தைகள் பாதுகாப்பு காவல் பிரிவால் விசாரிக்கப்படுகிறது. இது கர்ப்பம் மறுப்பு தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.