அமெரிக்க ஐரோப்பிய ராணுவத்தினர் இடையே பிரிவு- US அடிக்கும் யூ-டேன்

நேட்டோ கூட்டுப்படை தளத்தில், பல்லாயிரம் அமெரிக்க ராணுவத்தின் பணியில் உள்ளார்கள். இதே போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவ வீரர்களும் உள்ளார்கள். இதுவே நேட்டோ நாடுகளின் பலம். ஆனால் அமெரிக்க அதிபர், இந்தப் படைகளில் உள்ள கணிசமான அளவு அமெரிக்க வீரர்களை, பசுபிக் பிராந்தியத்திற்கு மாற்ற உள்ளதோடு. அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையையும் குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த அளவுக்கு ரஷ்யா மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் ரம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இதனால் போலந்தில் மற்றும் ரஷ்ய எல்லையில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்போது ஐரோப்பிய நாட்டு வீரர்களோடு இணைந்து செயல்படுது கணிசமான அளவு குறைந்துள்ளது. இது அமெரிக்கா எடுத்திருக்கும் மிகவும் ஆபத்தான ஒரு நடவடிக்கையாக பார்கப்படுகிறது.

இதன் காரணத்தால், கனடா, அவுஸ்திரேலிய போன்ற நாடுகள் தமது நாட்டுப் படைகளை கூடுதலாக நேட்டோ படையணியில் இணைக்க உள்ளதோடு. பிரித்தானியாவும் மேலதிக துருப்புகளை போலந்து எல்லைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், நேற்றைய தினம்(27) அமெரிக்க அதிபரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.