சீனாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. $200 மில்லியன் மதிப்புள்ள ஆர்டரை இந்தியாவிடம் வைக்கப்போவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இது மணிலாவுடனான இந்தியாவின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தமாக இருக்கும்.
இருந்து வான் ஏவுகணை அமைப்பு கடந்த ஆண்டு அர்மேனியாவிற்கு $230 மில்லியன் ஒப்பந்தத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது. பிலிப்பைன்ஸ் விற்பனை அர்மேனிய ஒப்பந்தத்தை விட பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2022 இல் பிலிப்பைன்ஸுக்கு இந்தியா $375 மில்லியன் மதிப்பிலான நடுத்தர தூர பிரம்மோஸ் அதிவேக கப்பல் ஏவுகணை விற்பனை செய்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த ஆண்டு மணிலாவில் நடந்த ஆசிய பாதுகாப்பு கண்காட்சியில் பல ஏவுகணைகளை காட்சிப் படுத்தியது. இதில் ஆகாஷ் என்னும் குறுந்தூர ஏவுகணைகள் மிகவும் நேர்த்தியா வடிவமைக்கப்பட்டு இருந்தது. அனைவரையும் கவர்ந்து இருந்தது.