மதுரையில் விஜய் நடத்திய மாநாட்டைப் பார்த்து, தற்போது முழு இந்தியாவுமே மிரண்டு போய் உள்ளது. இதனை அடுத்து ஆந்திராவில் தற்போது துணை முதல்வராக இருக்கும், பவன் கல்யாண், தனது ஆதரவை விஜயைக்கு கொடுப்பதாக மேடையில் பேசியுள்ள விடையம், தென்னிந்தியாவை அதிரவைத்துள்ளது. ஆந்திராவில் TVK தலைவர் விஜய்க்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இது போக கேரளாவில் அவருக்கு தமிழ் நாட்டில் உள்ள ஆதரவை விட அதிகமான ஆதரவு உள்ளது.
இதனால் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் என்று பல மாநிலங்களில் உள்ள கட்சிகளோடு விஜயால் கூட்டணி ஒன்றை நிச்சயம் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. நடைபெறவுள்ள 2026 தேர்தலில் விஜய் வெற்றி பெற்றால், இந்திய தேசிய அளவில் பெரும் கூட்டணி ஒன்றை உருவாக்கி, BJPக்கு எதிராக பெரும் கூட்டணி ஒன்றை அமைக்கவே விஜய் விரும்பம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது நடைமுறைக்கு சாதகமானதே. BJPயை எதிர்க்க வலுவான ஒரு கூட்டணி இல்லை. காங்கிரஸ் பலத்தை இழந்து பல வருடங்கள் ஆகிறது. எனவே புதிய வேகம் கொண்ட ஒரு கட்சி தேவை. இவை அனைத்தும் அமைந்து விட்டால், தமிழக தலைவர் விஜய் கூட நாளை இந்திய பிரதமர் ஆக வாய்ப்புக்ள் உள்ளது.