கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்குள் செல்லும் பொருட்கள் அனைத்திற்கும் 25% விகித வரியை விதித்துள்ளார் ரம். இது நேற்றைய தினத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ள அதேவேளை. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கும் 25% சத விகித வரியை விதிக்க ரம் கட்டளையிட்டுள்ளார். இதனால் சீனா கடும் சீற்றத்தில் உள்ளது.
இதேவேளை இது ஒரு வணிகப் போராக மட்டும் மாறவில்லை. மாறாக உலகப் போராக வெடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் சொல்லப் போனால், உலக வர்த்தகத்தை இது மிகவும் பாதிக்க கூடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இன்றைய தினம் பேசிய சீன நாட்டு அதிபர், அமெரிக்கா விதித்துள்ள புது வரி தொடர்பாக பேசியுள்ளார். வணிகப் போர் என்றாலும் சரி, 3ம் உலகப் போர் என்றாலும் சரி எதற்கும் சீனா தயாராகவே உள்ளது என்றும். சீனாவை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அதிபர் பேசியுள்ளார்.அவர் பேசிய கடுமையான வார்த்தைகள் உலகையே உலுக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.