லண்டனில் தற்போது குற்றச் செயல்கள் பன்மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2023 தொடக்கம் 2024 வரை குற்றச் செயல்கள் 300% மடங்கால் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இளைஞகள் போதைக்கு அடிமையாவதும். அதனால் அவர்கள், ஆயுதங்களை கையில் எடுப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் மத்திய லண்டனில் ஓடும் பேருந்து ஒன்றில், ஒரு நபர் சாமுராய் வாளோடு இருக்கிறார் என்று பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே. ஆயுதம் தாங்கிய பொலிசார் குறித்த பஸ்ஸை நிறுத்தி அதில் இருந்த நபரைக் கைது செய்துள்ளார்கள். அந்த பேரூந்தில் இருந்த பலர் நடுங்கிக் கொண்டு இருந்துள்ளார்கள்.
காரணம் ஏதாவது அசைந்தால் அன் நபர் வெட்டி விடுவாரோ என்ற பயம். ஆனால் கைதாகிய பின்னர் எதுவுமே நடக்காதவர் போல இந்த நபர் பொலிசாரோடு மிகவும் சகஜமாக பேசிக் கொண்டு செல்கிறார். இதனை தான் பார்க முடியவில்லை.