என்ன தான் இருந்தாலும் அண்ணன் சீமானை இப்படி எல்லாம் திட்டியிருக்க கூடாது தான். அவர் ஆமைக் கறி, உடும்புக் கறி, என்றி பல கறிகள் பற்றி கதை சொல்லி இருக்கிறார் தான். அது எல்லாம் எமக்குத் தெரியும். ஈழத் தமிழர்கள் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் சமீபத்தில் தமிழில் பேசவில்லை என்றால், விமானத்தை எப்படி கடத்துவது என்பது தொடர்பாக அண்ணன் சீமான் அவர்கள், ஒரு பிளான் போட்டு மேடையில் பேச…
அந்தப் பக்கமாக கீழே இருந்த தம்பி ஒருவர், “அடே இவன் உலக மகா நடிகனடா” சாமி என்று சொல்லி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். சிலர் இதனை மார்ஃபிங் வீடியோ என்று கூறுகிறார்கள். இருந்தாலும் பாருங்கள் சீமானின் அறிவை. ஒரு நாடு அல்லது மாநிலத்தின் விமான சேவை எப்படி இயங்க வேண்டும் என்பது ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது. சீமான் கட்சி தொண்டர்கள் 60 பேர் ஒரே நடையில் டிக்கெட் புக் செய்து அந்த விமானத்தில் ஏறி, தமிழில் அறிவிக்கவில்லை என்றால் விமானத்தை கிளம்ப விட மாட்டோம் என்று மிரட்டுவார்களாம். இந்த 60 டிக்கெட் புக் பண்ண காசை வெளிநாட்டு இழிச்சவாய் தமிழர்கள் கொடுப்பார்கள். கீழே அந்த கன்றாவி வீடியோ உள்ளது பாருங்கள் ஐயா… இவர் தான் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத் தரப்போகும் புண்ணியவாண் !