கொழும்புல் உள்ள ஸ்லேவ் ஐலண்டில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த, சீனப் பிரஜை ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரது அறையை துப்பரவு செய்ய சென்றபோதே அவரது உடலைக் கண்ட பணியாளர், தகவல் சொல்ல ஹோடல் நிர்வாகம் பொலிசாரை வரவளைத்துள்ளது.
இறந்து கிடந்த நபர் ஒரு சீனப் பிரஜை எனவும், செல்வந்தர் எனவும் அடையாளம் காணப்பட்ட நிலையில். அவரது பணமோ மோபைல் போன் மற்றும் கணணி எதுவுமே களவு போகவில்லை என்பது பெரும் மர்மம். இது இவ்வாறு இருக்க…
அவர் கொல்லப் பட்ட விதவும் நூதனமாகவே உள்ளது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஹோட்டல் அறையில் சில இடங்களில் மட்டும் ரத்தக் கறை காணப்படுகிறது. இதனை விசாரிக்க பொலிசார் முதலில் CCTV வீடியோவை ஆராய ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள எமது நிருபர் தெரிவித்தார்.