பிரான்சில் இருந்து கடல் வழியாக பிரித்தானியாவுக்கு வரும், அகதிகளின் எண்ணிக்கை 30% சத விகிதத்தால் திடீரென அதிகரித்துள்ளது. பிரிட்டன் வரும் அகதிகள் அனைவரையும், ரிவாண்டா நாட்டுக்கு அனுப்பி. அதன் பின்னரே அவர்களது விண்ணப்பத்தை விசாரிப்பது என்று , முன்னர் இருந்த கான்சர்வேட்டிவ் கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த உடனே அந்த ரிவாண்டா திட்டத்தை கை விட்டார்கள்.
இதனை அறிந்துகொண்ட பிரான்சில் உள்ள அகதிகள், உடனடியாக , ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டனுக்குள் வர ஆரம்பித்துள்ளார்கள். இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் 1 லட்சத்தி 8,000 பேர் இவ்வாறு வந்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, பிரிட்டன் அரசு சுமார் 8,500 ஹோட்டல்களோடு , ஒப்பந்தம் போட்டு. அகதிகளை ஹோட்டலில் தங்கவைத்துள்ளார்கள்.
வருடக் கணக்கில் இந்த அகதிகள் ஹோட்டலில் ஜாலியாக தங்கியுள்ளதோடு. இலவசமாக 3 வேளையும் சாப்பிடுகிறார்கள். இவை அனைத்தும் வரி கட்டும் மக்கள் பணத்தில் இருந்து செலவு செய்யப்படுகிறது. இதனால் லேபர் கட்சிக்கு தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் எண்ணிக்கையை, உடனே குறைப்பதற்கும், அகதிகள் விடையத்தில் உடனே கவனம் செலுத்தவும், தமது அரசு தேவையான நடவடிக்கையில் இறங்கும் என்று ஜியர் ஸ்டாமர் நேற்று(27) தெரிவித்துள்ளார்.