காசா பகுதியில் தொடர்ந்து போர் சூழல் நிலவி வரும் நிலையில், தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் போர்ச் சூழலை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் அடங்குவர். இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், அமைதிப் பேச்சுவார்த்தையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.