போனிக்ஸ் நகரை நடுநடுங்க வைத்த மரணப் புயல்! வானம் இருண்டது! நகரமே இருளில் மூழ்கியது!
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் திடீரென வீசிய பயங்கர தூசிப் புயலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வானம் கறுத்து இருண்டது. அணு ஆயுத தாக்குதல் போல் தோன்றிய அந்தப் புயல், நகரத்தையே உலுக்கி, மின் இணைப்புகளை துண்டித்ததுடன், விமானப் போக்குவரத்தையும் முடக்கியது.
திங்கட்கிழமை பிற்பகல், போனிக்ஸ் நகர மக்கள் வழக்கமான தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, தென் மேற்கு திசையில் இருந்து பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அது, வெறும் சத்தம் அல்ல; ஒரு அரக்கன் போல் உருண்டு வந்த பயங்கரமான தூசிப் புயலின் ஓசை.
கண் எதிரே இருள் சூழ்ந்த பயங்கரம்!
‘ஹபூப்’ என்று அழைக்கப்படும் இந்த தூசிப் புயல், நகருக்குள் நுழைந்ததும் நிலைமை தலைகீழானது. ஒரு நொடியில் சூரியன் மறைந்தது, வானம் கரும் மேகங்கள் சூழ்ந்ததுபோல் காட்சியளித்தது. கண் எதிரே இருந்த எதுவும் தெரியாத அளவுக்குத் தெரிவுநிலை குறைந்தது. வாகன ஓட்டிகள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு நடுங்கினர். நகரமே ஒரு திகில் படத்தின் பின்னணியில் இருப்பதுபோல் தோன்றியது.
60,000 வீடுகள் இருளில் தள்ளப்பட்டன!
இந்த புயலின் கோரத்தாண்டவம் மின்சார விநியோகத்தையும் விட்டு வைக்கவில்லை. மணிக்கு 70 மைல் வேகத்தில் வீசிய காற்றால், பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், மாரிகோபா மாவட்டத்தில் மட்டும் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. நகரமே அமானுஷ்யமான அமைதியில் உறைந்து போனது.
விமான நிலையம் முடங்கியது! பயணிகள் கதறல்!
ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் நிலைமை இன்னும் மோசமானது. புயல் காரணமாக அனைத்து விமானங்களும் தரையிறங்குவது மற்றும் புறப்படுவது நிறுத்தப்பட்டன. இதனால், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின, குறைந்தது 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயத்தில் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்குள் அலறித் துடித்தனர்.
காற்றின் வேகத்தால் விமான நிலையத்தின் கூரைகள் கிழிந்து தொங்கின. டெர்மினல் 4-ல் இருந்த இணைப்புப் பாலம் பிளந்து, சுக்கல் சுக்கலாகியது. இந்த பயங்கர நிகழ்வு, போனிக்ஸ் நகர மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.