உயிரைப் பறிக்க வந்த கேளிக்கை! சவூதியில் நடுவானில் உடைந்த ராட்சத சவாரி!

உயிரைப் பறிக்க வந்த கேளிக்கை! சவூதியில் நடுவானில் உடைந்த ராட்சத சவாரி!

சவூதி அரேபியாவில் உள்ள தைப் (Taif) நகரில் இருக்கும் கிரீன் மவுண்டன் பார்க் (Green Mountain Park) என்ற கேளிக்கைப் பூங்காவில், “360 டிகிரீஸ்” என்ற சவாரி திடீரென நடுவானில் உடைந்து விழுந்ததில், 23 பேர் காயமடைந்தனர். இதில், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த பயங்கரமான விபத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், மக்கள் அந்த சவாரியில் உற்சாகமாகச் சுழன்று கொண்டிருந்தபோது, அதன் நடுவில் இருந்த முக்கியத் தூண் திடீரென இரண்டாக உடைந்து, பயணிகள் இருந்த பகுதி கீழே விழுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. விபத்து நடந்தவுடன், அப்பகுதி முழுவதும் அலறல் சத்தத்தால் நிரம்பியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பூங்காவை மூடி வைக்கவும் பிராந்திய ஆளுநர் சவுத் பின் நஹார் பின் சவுத் பின் அப்துல்அஜிஸ் உத்தரவிட்டுள்ளார்.