மே மாதம் 8ம் திகதி முதல் மே மாதம் 11ம் திகதி , அதாவது 3 நாளைக்கு போர் நிறுத்தம் ஒன்றை தானாகவே முன் வந்து ரஷ்யா அறிவித்துள்ளது. இதனை உக்ரைன் ஏற்றுக் கொண்டதா என்பது இன்னும் தெரியவில்லை. ஜேர்மனியின் நாசிப் படைகள், 2ம் உலகப் போரில் பெரும் வெற்றியடைந்து இறுதியாக ரஷ்யாவை தாக்கி பல இடங்களை கைப்பற்றியது .
ஆனால் ரஷ்யா சற்றும் அசரவில்லை ஹிட்லரின் நாசிப் படைகளை உள்ளே வர விட்டு, குளிர் காலம் ஆரம்பிக்கும் வேளையில் தாக்குதல் நடத்தி பல்லாயிரம் நாசிப் படைகளை கொன்று குவித்தது ரஷ்யா. இதனால் ஹிட்லர் படை பெரும் அழிவை சந்தித்ததோடு. சரண் அடையும் நிலை ஏற்பட்டது.
இந்த நிகழ்வை மே மாதம் 9ம் திகதி, ரஷ்யா வெற்றி விழாவாக கொண்டாடி வருகிறது. அந்த நிகழ்வு நடக்கும் வேளையில் உக்ரைன் படைகள் தாக்கினால் அது ரஷ்யாவுக்கு பெரும் அவமானம் ஆகும். இதனால் ரஷ்யா தானாகவே யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனை அமெரிக்க அதிபர் ரம் பாவிக்க , தயங்கவில்லை. அமெரிக்கா இதனை சாட்டாக வைத்து 3 நாட்கள் வேண்டாம் ஒரு நல்ல போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவோம் என்று அதிபர் புட்டினுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதனால் ஒரு நல்ல யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று உருவாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.