அலெக்ஸா பிரிவின் உயர்மட்டக் குழு உறுப்பினர் வெளியேற்றம்: வன்பொருள் இலக்குகளுக்குப் பின்னடைவா?

அலெக்ஸா பிரிவின் உயர்மட்டக் குழு உறுப்பினர் வெளியேற்றம்: வன்பொருள் இலக்குகளுக்குப் பின்னடைவா?

அமேசானின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் மூத்த துணைத் தலைவரும் (VP of Device Software and Services), தலைமைச் செயல் அதிகாரியான (CEO) ஆண்டி ஜாஸியின் ‘எஸ்-டீம்’ (S-team) எனப்படும் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ராப் வில்லியம்ஸ் (Rob Williams) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமேசான் நிறுவனம் தனது வருடாந்திர புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான நிகழ்வை நடத்தி சில நாட்களுக்குப் பிறகு இந்த முக்கிய நிர்வாகியின் விலகல் செய்தி வெளியாகியுள்ளது.

சாதனப் பிரிவின் மென்பொருள் மற்றும் சேவைகளைப் பார்த்து வந்த ராப் வில்லியம்ஸ், அமேசானில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாகவும், இது “ஓய்வு பெறுவதற்கான” (retire) முடிவு என்றும் சாதனங்கள் பிரிவின் தலைவர் பானோஸ் பனே (Panos Panay) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ராப் வில்லியம்ஸ் அமேசானில் 2022-ஆம் ஆண்டு முதல் தலைமைச் செயல் அதிகாரிக்கு ஆலோசனை வழங்கும் 29 பேர் கொண்ட உயரடுக்குக் குழுவில் (S-Team) அங்கம் வகித்து வந்தார். இந்த உயர்மட்டக் குழுவில் இருந்து ஒருவர் விலகுவது, ஒரு பெரிய மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

அமேசான் நிறுவனம் புத்துயிர் அளிக்கப்பட்ட எக்கோ ஸ்பீக்கர்கள் (Echo speakers), கலர் கிண்டில் (color Kindles), மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபயர் டிவி (Fire TVs) உள்ளிட்ட பல புதிய சாதனங்களை இந்த வார தொடக்கத்தில் தான் வெளியிட்டது. வில்லியம்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபயர் டிவி சாதனங்களுக்கான புதிய இயங்குதளத்தை (OS) உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

ராப் வில்லியம்ஸ் வகித்து வந்த பொறுப்பை, முன்னர் ஃபயர் டிவி தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவின் துணைத் தலைவராக இருந்த தபஸ் ராய் (Tapas Roy) ஏற்றுக்கொள்வார் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனப் பிரிவில் ஆட்குறைப்பு மற்றும் AI- சார்ந்த அலெக்சா அப்டேட்களில் உள்ள மந்தநிலை போன்ற சவால்கள் உள்ள நிலையில், ராப் வில்லியம்ஸின் விலகல் அமேசானின் வன்பொருள் (Hardware) இலக்குகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறது.

Loading