பிரிட்டனில் உள்ள ASDA சூப்பர் மார்கெட், Shoplifters என்று சொல்லப்படும் , திருடர்களை கண்டு பிடிக்க என பல மில்லியன் செலவில் AI-தொழில்நுட்ப்ப CCTV கமராக்களை கண்டுபிடித்துள்ளது. திருடர்களை கண்டு பிடிப்பது, அவர்கள் முகத்தை துல்லியமாக அடையாளம் கண்டு டேட்டா பேசில் போடுவது. ஏனைய கிளைகளோடு பகிர்ந்து கொள்வது என்று பல நவீன யுக்திகளை இந்த CCTV கமரா கையாளும்.
கடைக்குள் நுளையும் ஒரு கஸ்டமர், நடக்கும் விதம் அவர் செயல்படும் விதத்தை வைத்தே அவர் மீது இந்த CCTV கமரா கை வைக்கிறது. பின்னர் அவரை தொடர்கிறது. அவர் ஏதாவது பொருளை திருடுவது தெரிந்தால். ஆட்டமெட்டிக்காவே அவரை லிஸ்டில் சேர்த்து விடுகிறது.
அன் நபர் வேறு ஆஸ்டா சூப்பர் மார்கெட் சென்றால் கூட, உடனே அந்த கடையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிக்கு அலேட் சென்றுவிடும். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா கால கட்டத்திற்கு பின்னர், கடைகளில் களவெடுப்பது பன் மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு ஆஸ்டா சூப்பர் மார்கெட் கடை மட்டும் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சம் பவுண்டுகளை (£400,000)இழக்கிறதாம்.
பிரித்தானியாவில் மட்டும் ஆஸ்டா சூப்பர் மார்கெட்டுக்கு, 1006 கடைகள் உள்ளது. அப்படி என்றால் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை மில்லியன் பவுண்டுகளை இவர்கள் இழக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். இந்த தொல்லையை தாங்க முடியாமல் தான், ஆஸ்டா இப்படி ஒரு முடிவை எட்டியுள்ளது.