சீன கப்பல் மிரட்டல்: தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் அவுஸ்திரேலியா !

அவுஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன போர் கப்பல் தொடர்ந்தும் கடல் பரப்பில் நிலைகொண்டுள்ளது. இதனை அடுத்து, அவுஸ்திரேலியா தனது கடல் படைக் கப்பல்களை சற்று விரிவு படுத்தவும் மற்றும் நவீனமயாக்கவும் முடிவுசெய்துள்ளது.

இதனை அடுத்து, அவுஸ்திரேலிய கடல் படையில் உள்ள போர் கப்பல்களில் , எதிரி நாட்டுக்குக் கப்பலை, தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பொருத்த உள்ளது அவுஸ்திரேலியா. சீனாவின் இந்த நடவடிக்கை அவுஸ்திரேலிய பாதுகாப்பிற்க்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவிடம் மிகவும் சக்த்திவாய்ந்த கடல் படை உள்ளது. சீன நாட்டின் கடல் படையிடம் நவீன போர் கப்பல்கள், மற்றும் சப்-மெரீன் கப்பல்கள் உள்ளது. ஆனால் தற்போது அவுஸ்திரேலிய கடல் பரப்பில் நிலைகொண்டுள்ள சீன போர் கப்பல், ஸ்டலத் வகையான அதி நவீன போர் கப்பல் ஆகும்.

https://www.reuters.com/world/asia-pacific/australia-moves-arm-troops-with-anti-ship-missiles-china-threat-looms-2025-03-13/