1970ம் ஆண்டு தொடக்கம் BBC இல் பணியாற்றி, ஒரு ஈழப் பெண்ணாக முதல் முதல் ஊடகத் துறையில் கால் பதித்தவர் ஆனந்தி சூரியப் பிரகாசம் அவர்கள். எமது தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கூட, ஆனந்தி அக்காவின் செய்தி வாசிப்பை கேட்டு வளர்ந்தவர் தான். அதனால் தான் அவர் ஆனந்தி அக்காவை அழைத்து, பேசி, முதல் பேட்டியை கொடுத்தது மட்டுமல்லாது.
தனது கையால் உணவை பரிமாறி, ஆனந்தி அக்காவை கெளவரப்படுத்தி இருந்தார். அவர் சில நாட்களுக்கு முன்னர் இறந்த நிலையில். அவர் நினைவாக வணக்க நிகழ்வு ஒன்று லண்டன் ஹரோவில் நடைபெறவுள்ளது. அடுத்த சனிக்கிழமை(08) மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், பல சர்வதேச ஊடக அமைப்பின் நிருபர்கள், செய்தியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். ஆர்வம் உள்ள மக்கள் இதில் கலந்கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கிறார்கள். விபரங்கள் கீழே: