லண்டன் ஹரோவில் நடைபெறும் மாபெரும் Badminton போட்டி வீரர்களே முந்துங்கள் !

லண்டன் ஹரோவில், 21ம் திகதி பாங் ஹாலிடே அன்று மாபெரும் Badminton போட்டி நடைபெறவுள்ளது. இலவச சிற்றுண்டிகள் அங்கே வழங்கப்படுவதோடு, லண்டனில் உள்ள முன்னணி கழகங்களில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

குறிப்பிட்ட அளவு இடமே உள்ளதால், விளையாட்டு வீரர்கள் கீழே உள்ள இலக்கத்தில் தொடர்பு கொண்டு, உடனடியாக உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். யாரும் விளையாடக் கூடிய குழு, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 3 தரமாக இந்த போட்டிகள் பிரிக்கபப்ட்டுள்ளது.

நீங்கள் சிங்கிள் பிளேயராக இருந்தால் கூட, உங்களுக்கான சரியான ஜோடியை நீங்கள் தெரிவு செய்ய முடியும். மிகவும் விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், ஹரோ மேயர், ஹரோ MP என்று பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பரிசுகளையும் கேடையங்களையும் வழங்க உள்ளார்கள். விபரங்கள் கீழே…