போயிங் விமானத்தை தடைசெய்த சீனா: ஆடிப் போன வெள்ளை மாளிகை !

அமெரிக்க அதிபர் ரம்பின் சேட்டையால், அமெரிக்க நிறுவனமான போயிங் கம்பெனி பெரும் சரிவடைந்துள்ளது. இன்று செய்வாய்(15) முதல் அமெரிக்காவின் போயிங் விமானத்தை சீனா வாங்குவது இல்லை என்று அறிவித்துள்ளதோடு. அதன் விமான உதிரிப் பாகங்களை சீன கம்பெனிகள் வாங்க தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்க தயாரிப்பான போயிங் விமான உற்பத்தி பெரும் நஷ்டமடைந்துள்ளது. இன்று மட்டும் 10% சத விகிதம் அதன் பங்குகள் சரிவடைந்துள்ள நிலையில்.

மேலும் 3% சத விகிதம் சரிவடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு முடிவை சீனா எடுக்கும் என்று ரம் நிர்வாகம் சற்றும் எதிர்பார்கவில்லை. காரணம் கடந்த காலங்களில், போயிங் விமானம் 4 விமானத்தை தயாரித்தால், அதில் ஒரு விமானத்தை சீனா வாங்கி வந்தது. அந்த ரீதியில் ஆண்டு ஒன்றுக்கு பல பில்லியன் டாலர்களை சீனா செலவு செய்து அமெரிக்க போயிங் விமானங்களை வாங்கி வந்தது.

ஆனால் தற்போது சீன அரசு விதித்துள்ள தடையால், சீன கம்பெனிகள் இனி போயிங் விமானத்தை வாங்க முடியாது. அமெரிக்க வரலாற்றில் இது ஒரு பேரிடியாக விழுந்துள்ளது. இதனால் போயிங் நிறுவனம் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை கூட தோன்றலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பீஜிங்(சீன) அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பல தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ள நிலையில். சீன அரசு எந்த ஒரு அழைப்பையும் ஏற்கவே இல்லை !

78 வயதில் அறளை பெயர்ந்த வயதில் அமெரிக்க முதல்வராக வந்து, தன் மக்களையே கொடுமை செய்யும் ஒரு அதிபராக ரம் மாறியுள்ளார். அவருக்கு வாக்குப் போட்ட விவசாயிகள் தற்போது நிலை தடுமாறி நிற்கிறார்கள். இனி என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ ? தெரியவில்லை …. !