பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதிக்கும் புதிய வரிகளுக்கு, எதிரான பிரிட்டனின் பதிலடி குறித்து “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில், இங்கிலாந்து உடனடியாக பதிலடி நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் ஈடுபடாமல் வரி விலக்கு பெற பிரிட்டன் முயற்சிக்கும் என பிரதமர் கருத்து தெரிவித்த போதிலும், பதிலடி வரிகள் பரிசீலிக்கப்படுவதாக சர் கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
“இங்கிலாந்து வரிகளையும் உள்ளடக்கிய பொருளாதார ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை செய்து வருகிறது, நாம் வெற்றி பெற்றால் இது சாத்தியமாகும்,” என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். “ஆனால் அனைத்து விருப்பங்களையும் மேசையில் வைத்திருப்போம்.”
இந்த அறிவிப்பு, வணிக செயலாளர் ஜொனாதன் ரெய்னோல்ட்ஸ் வர்த்தக தண்டனைகளுக்கு “தேசிய நலன் கருதி பதிலளிக்க தயங்க மாட்டோம்” என எச்சரித்த பின்னர் வந்துள்ளது. நேற்றிரவு நடைமுறைக்கு வந்த இந்த வரிகள், அமெரிக்காவிற்குள் நுழையும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ட்ரம்ப் உலகளாவிய வரிகளை விதித்துள்ளது.
சர் கீர் ஸ்டார்மர் மற்றும் அவரது புதிய அமெரிக்கத் தூதர் பீட்டர் மேண்டெல்சனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்வட்டாரத்தினர் தி இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததன்படி, விரைவான வர்த்தக ஒப்பந்தத்திற்கான நம்பிக்கைகள், சர் கீர் ஸ்டார்மர் ஆன்லைன் பாதுகாப்பு சட்டத் திட்டங்களை ரத்து செய்ய ஒப்புக்கொள்வதைப் பொறுத்தது – இது பிரதமருக்கு மிகவும் கடினமான சமரசமாக இருக்கக்கூடும் என்பதால் இங்கிலாந்து தனது சொந்த வரிகளை விதிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.