ஜப்பானில் அவசரமாகத் தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்!

ஜப்பானில் அவசரமாகத் தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்!

பிரிட்டனைச் சேர்ந்த F-35 ரக போர் விமானம் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக ஜப்பானின் ககோஷிமா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இந்தச் சம்பவம், நேற்றுக் காலை 11.30 மணியளவில் நடைபெற்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானி, நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை உணர்ந்து, அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரியுள்ளார். உடனடியாக, விமான நிலையம் தயார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் ஓடுபாதை மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, சில வணிக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது.

யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களில் பிரிட்டிஷ் போர் விமானத்திற்கு இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, இதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிட்டிஷ் விமானம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் அவசரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டுப் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.