உண்மையில் கனேடியர்கள் மிகவும் தன்மானமுள்ள மனிதர்கள் தான். டொனால் ரம்புக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டியுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.
கனடாவில் வசிக்கும் மக்கள், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கனடாவில் உள்ள பல கடைகளில், கனடா தயாரிபு மது பாணங்கள் விற்றுச்சுட்டு காலியாகி வருகிறது. அதேவேளை அமெரிக்க மதுபாண வகைகள் விற்பனையாகாமல் அப்படியே இருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வரும், சில வகையான மது பாணங்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனை இறக்குமதிசெய்ய கனடிய நிறுவங்கள் விரும்பவில்லை. இதனால் அமெரிக்க கம்பெனிகள் பல நஷ்டமடைய ஆரம்பித்துள்ளது. ஏனடா ரம்புக்கு வாக்கு போட்டோம் என்று எண்ணும் அளவு நிலமை தற்போது மாறிவிட்டது.
இது இவ்வாறு இருக்க, Buy Canadian என்ற சுலோகம் பல சூப்பர் மார்கெட்டில் உள்ளது. இதற்கு மதிப்பளித்து கனேடிய மக்கள் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க, தமது நாட்டு பொருட்களையே வாங்கி வருகிறார்கள். இதனால் உள்ளூர் உற்பத்தி பெருகி வருகிறது.