china hits back at us: திருப்பி அடிக்கும் சீனா – இருவரும் மாறி மாறி கழுத்தை இறுக்கும் சம்பவம் !

அமெரிக்க அதிபர் ரம், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 34% சத விகித வரி என்று அறிவிக்க, பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு மேலதிக வரியை அறிவித்துள்ளது. இதனால் பெரும் யுத்தம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இவர்கள் போடும் சண்டையில், என்னவோ மக்கள் தான் வெகுவாகப் பாதிக்கப்படப் போகிறார்கள். ஏற்கனவே இதன் தாக்கத்தை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. காரணம் முட்டை விலை !

அமெரிக்காவில் முட்டையின் விலை 20$ டாலர்களாக உயர்ந்துள்ளது. எல்லையோரம் வசிக்கும் மக்கள் முட்டை வாங்க கனடாவுக்குள் சென்று வர வேண்டிய நிலையில் உள்ளார்கள். அமெரிக்காவில் ரம்புக்கான எதிர்ப்பு 43% சத விகிதத்தால் மேலும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், மக்கள் டொனால் ரம்பை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் கோடிக் கணக்கான உரத்தின் விலை, பன் மடங்காக அதிகரிக்க உள்ளது. இதனால் அமெரிக்காவின் விவசாயமே பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. ஒரு நாட்டில் விவசாயம் தோற்றுப் போனால் என்ன நடக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலங்கை மற்றும் பங்களாதேஷ்.

அமெரிக்காவை பொறுத்தவரை அங்குள்ள பெரும்பாலான மக்கள் கருதுவது என்னவென்றால், பெண்களால் அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியாது என்பது தான். இதன் காரணத்தால் தான் கமலா ஹரிஸ் போட்டியிட்டவேளை, பலர் டொனால் ரம்புக்கு தமது வாக்குகளைப் போட்டார்கள். ஆனால் அதன் பலனை தற்போது அவர்களே அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

சீனாவோடு மட்டும் அல்ல பல உலக நாடுகளோடு அதிபர் ரம் ஒரே நேரத்தில் மோத ஆரம்பித்துள்ளார். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பும் மேலும் விழுந்துள்ள நிலையில். நஸ்டாக எனப்படும் அமெரிக்க பங்கு சந்தை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. பலர் தமது பங்குகளை விற்று விட்டு தப்பினால் போதும் என்று ஓட்டம் எடுக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் அமெரிக்க பண வீக்கம் அதிகரித்து. அமெரிக்கா பாங் ரப்சி அடிக்கும் நிலைக்கு கூடச் செல்லலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. அதாவது இலங்கை , பங்களாதேஷ் நிலைக்கு செல்லக் கூடும்.