China plans to ban Hollywood movies: அமெரிக்க ஹலிவு படங்களுக்கு சீனா தடை ! $585million இழக்கும் அமெரிக்க கம்பெனிகள் !

அமெரிக்க அதிபர் விதித்துள்ள 104% விகித வரியால், சீனா கடும் கோபம் அடைந்துள்ளது. கடைசிவரை அமெரிக்காவை எதிர்த்து , எம்மாலான எல்லா எதிர்ப்பையும் காட்டுவோம் என்று சீன அதிபர் வெளிப்படையாக பேசியுள்ள விடையம், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்.

சீனா அமெரிக்க ஹாலிவுட் திரைப்படங்களை தடைசெய்ய உள்ளது என்ற செய்தி BBC ஆசிய சேவையால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் திரையரங்குகளில் ஓடிய ஹாலிவுட் திரைப்படங்கள், சுமார் 585 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளது. இதனை உடனே தடைசெய்ய வேண்டும் என்பதில் சீன அரசு உறுதி பூண்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க அமெரிக்க அதிபர் மேலும் பல வரிகளை சீனா மீது திணிக்க கூடும். ஆனால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் உரம், அதற்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இதுபோக சீனாவில் இருந்து தான் ஐ-போன் உற்பத்தியாகி அமெரிக்கா செல்கிறது. தற்போது ஐ-போன் நிறுவனம் தலையில் துண்டைப் போடும் நிலையில் உள்ளது.

இப்படி உலகத்தில் உள்ள வணிக ஒழுங்கையே ரம் தலை கீழாக பிரட்டிப் போட்டுள்ளார். சீன அரசு ஒரு போதும் அமெரிக்காவிடம் அடி பணியப் போவது இல்லை. இந்த விடையத்தில் மட்டும் அல்ல. எந்த விடையத்திலும் சீனா ஒரு போது அமெரிக்காவிடம் மண்டியிடாது. இதனை ரம் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்பதே ஆச்சரியம்.