சந்திரனில் அணுமின் நிலையம்! அதிரவைக்கும் சீனாவின் மெகா திட்டம்! விண்வெளிப் போட்டியில் புதிய திருப்பம்!
பெய்ஜிங்: விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த பாய்ச்சலாக, சந்திரன் மீது அணுமின் நிலையம் ஒன்றை அமைக்கும் பெரும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது! ரஷ்யாவுடன் இணைந்து நிலவில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்திற்குத் தேவையான மின் சக்தியை வழங்குவதே இதன் நோக்கம் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுவரை எந்த சீன விண்வெளி வீரரும் நிலவில் கால் பதிக்காத நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் ஒரு நிரந்தர தளத்தை நிறுவுவதே சீனாவின் இலக்காக உள்ளது.
இந்தப் பிரம்மாண்டமான திட்டமானது உலக விண்வெளிப் போட்டியில் பெரும் பரபரப்பையும் புதிய அத்தியாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.