ship that hit US tanker have been hacked: அமெரிக்க டாங்கர் வெடித்தது சதியா ? ஹக்கர்கள் வேலையா ?

1 லட்சத்தி 42,000 ஆயிரம் பரல், மசகெண்ணையோடு வந்த அமெரிக்க கப்பல், வேறு ஒரு கப்பலோடு மோதி பிரிட்டன் கடலில் வெடித்து எரிந்து வருகிறது. இன்றும் தீயை அணைக்க முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க. கடலில் தார் மற்றும் மசகெண்ணை கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணை அமெரிக்க ராணுவத்தின் ஜெட் விமானங்கள் பாவிக்க, கொண்டுவரப்பட்ட எண்ணை என்பது தற்போது கசிந்துள்ள செய்தி.

முன்னர் வெளியான செய்தியில், ஏதோ வணிகக் கப்பல் என்பது போல தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தினமே இது அமெரிக்க ராணுவத்திற்கு எரிபொருள் கொண்டு வந்த கப்பல் என்பது தெரியவந்துள்ளது. இதேவேளை அமெரிக்க கப்பல் ஆட்டோ பைலட் டில் இருந்துள்ளது. இதனால் தான் விபத்து ஏற்பட்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில்.

குறித்த அமெரிக்க கப்பலை, வட கொரியா அல்லது ஈரானின் ஹக்கர்கள், ஹக் செய்து அருகில் சென்ற கப்பலோடு மோதி இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது. கப்பலில் உள்ள ஆட்டோ பைலட் சிஸ்டம், எதிரில் கப்பல் வந்தால், தானாகவே திசையை மாற்றும், மற்றும் ஆபத்தான சமிஞ்சை ஒலியை எழுப்ப வல்லது.

அப்படி இருக்கையில் எப்படி இந்த விபத்து நடந்தது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது. இருப்பினும் கப்பல் ஹக் செய்யப்பட்டது என்ற செய்தியை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.