பெட் ரூமில் மகள் காலைப் பிடிக்க மனைவி கையைப் பிடிக்க ….

மகள்களின் கொடூர தாக்குதலில் தந்தை மரணம்: மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொரேனா என்ற பகுதியில் ஹரேந்திர மவுரியா என்பவர் வசித்து வந்தார். எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்த அவருக்கு மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சமீபத்தில், ஹரேந்திர மவுரியாவின் மகள்கள் அவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மனைவியின் தூண்டுதலின் பேரில், மகள்கள் தங்களது தந்தையை கம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஹரேந்திர மவுரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இரண்டு மகள்களின் திருமணத்தை சமீபத்தில் நடத்தி முடித்த மவுரியாவின் மனைவி, திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால், ஹரேந்திர மவுரியா மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர், அறையை விட்டு வெளியே வராததால் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள்களின் தாக்குதலால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.