group chat-இல் நிருபர் இணைந்தது தெரியாமல் யெமன் நாட்டை தாக்கும் திட்டத்தை சொன்ன துணை ஜனாதிபதி

யெமன் நாட்டை அமெரிக்க விமானப்படை எப்படி தாக்கவுள்ளது என்ற மிகவும் ரகசியமான தகவலை, குரூப் சாட்டல் போட்டுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி JD வான்ஸ். அதில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், பெண்டகன் அதிகாரிகள் இருப்பதாக அவர் எண்ணியுள்ளார். ஆனால் அந்த சட் குரூப்பில், அட்லாண்டிக் மகசீன் என்ற, ஊடகத்தின் நிருபரும் இணைந்து இருந்துள்ளார்.

இதனால் அமெரிக்க தாக்குதல் திட்டம் கசிந்து விட்டது. ஹவுத்தி என்னும் இஸ்லாமிய குழுவுக்கு யெமன் நாடு மறைமுகமாக உதவி வருகிறது. அத்தோடு யெமன் நாட்டில் உள்ள சில பகுதிகளில் ஹவுத்தி குழு செயல்பட்டும் வருகிறது. இவர்கள் வளைகுடாவில் உள்ள அமெரிக்க போர் கப்பல்களை டாகட் செய்து தாக்கி வருகிறார்கள். இதுவரை பெரிய அழிவு எதுவும் அமெரிக்காவுக்கு ஏற்படவில்லை.

இருப்பினும் யெமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் குழு மீது கடும் தாக்குதல் ஒன்றை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. இந்த தகவல்களே தற்போது கசிந்து விட்டது.

மிகவும் பாதுகாப்பான சட் குரூப் என்று கருதப்படும் “சிக்னல்” சட் குரூப்பில் தான் இது நடந்துள்ளது. ஆனால் இந்த சட் குரூப்பில் எப்படி நிருபர் ஒருவர் இணைந்தார் என்பது தான் தெரியவில்லை.

Source : . Donald Trump’s secret Yemen war plans were accidentally sent to journalist hours before airstrikes