போர் ஆரம்பித்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உக்ரைன் தலைநகஎ கிவ்வுக்கு பல ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள் நேற்று(24) விஜயம் செய்து இருந்தார்கள். போரினால் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுத் தூபிக்கு அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது மட்டும் அல்ல.
தங்கள் நாடுகள் உக்ரைனுக்கு கவசமாக இருக்கும் என்று பல நாட்டுத் தலைவர்களும், உலகிற்கு நேரடியாக காட்டியுள்ள நிலையில். ரஷ்யா சுமார் 450 தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை உக்ரைனுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தலை நகர் கிவ்வுக்கு அந்த விமானங்கள் வரவில்லை. அதற்கு முன்னரே உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பல விமானங்களை நடு வானில் சுட்டு வெடிக்க வைத்து விட்டது.
இருப்பினும் சில விமானங்கள் விழுந்து வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் நிற்பது தெரிந்தும் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தி இருப்பது, ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கையாக பார்க்ப்படுகிறது. தற்போது உள்ள சூழ் நிலையில், ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தாக்கினால். அமெரிக்க படைகள் உதவிக்கு வராது.
இதனால் ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து பலமான ஒரு ராணுவ கட்டமைப்பை கட்டி எழுப்ப தீர்மானித்துள்ளது. இது நேட்டோ அமைப்பை போல செயல்படும் என்றும். இது அமெரிக்கா இல்லாத ஒரு ராணுவ கட்டமைப்பு என்றும் கூறப்படுகிறது.