அமெரிக்காவை கைவிடும் ஐரோப்பா! டிரம்ப்பின் வர்த்தகப் போரால் சீனா பக்கம் திரும்பும் ஐரோப்பிய தலைவர்கள்! அமெரிக்கா விதித்துள்ள வரிகள் மற்றும் ரம் போடும் கடுமையான சட்ட திட்டங்களை சமாளிக்க முடியாமல் திண்டாடும் ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சீனாவுடன் புது வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ள விரும்பம் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு நிலை வரும் என்று அமெரிக்கா நினைத்தும் பார்த்ததில்லை.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் மற்றும் ரம் போடும் கடுமையான சட்ட திட்டங்களை சமாளிக்க முடியாமல் திண்டாடும் ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சீனாவுடன் புது வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ள விரும்பம் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு நிலை வரும் என்று அமெரிக்கா நினைத்தும் பார்த்ததில்லை.
டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளால், ஐரோப்பா அமெரிக்காவை கைவிட்டு சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்து வருகிறது. உதவிக்காக மேற்கு நோக்கி பார்ப்பதற்கு பதிலாக கிழக்கு நோக்கி திரும்பும் நிலைக்கு ஐரோப்பா தள்ளப்பட்டுள்ளது.
யூரோநியூஸ் அறிக்கையின்படி, இந்த மாத தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் “பரஸ்பர வரிகள்” உரையை நிகழ்த்திய பின்னர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் சீனாவைத்தான்.
அமெரிக்காவின் வரிகளால் ஏற்பட்ட பரவலான இடையூறுக்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பாவும் சீனாவும் உலகின் இரண்டு பெரிய சந்தைகளாக, வலுவான சீர்திருத்தப்பட்ட வர்த்தக முறைக்கு ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பை வலியுறுத்தியதாக ஐரோப்பிய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. சுதந்திரமான, நியாயமான மற்றும் சமமான விளையாட்டு மைதானத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக முறையை ஆதரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம், ஐரோப்பா அமெரிக்காவை விட சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவது தெளிவாகிறது. டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் ஐரோப்பாவை சீனா பக்கம் திருப்பியுள்ளது.