பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு திடீரெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அருகே உள்ள பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா தலங்களுக்குப் புகழ்பெற்ற இந்த நாட்டில் சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் போலியான செய்திகள் மற்றும் ஆபாசப் படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் தடை செய்யப்பட்டதால் மக்கள் அதை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.