Posted in

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உக்கிரமான சண்டை!

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்லசீ அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோல் பால்மர் மற்றும் ஜோவோ பெட்ரோவின் அபாரமான ஆட்டத்தால் செல்லசீ ஆதிக்கம் செலுத்தியது. எனினும், போட்டியின் முடிவில் ஏற்பட்ட பெரும் மோதல், வெற்றியின் ஒளியை மங்கச் செய்தது.

இறுதி விசில் ஒலித்தவுடன், இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி, களத்தில் ஒரு பெரிய சண்டையாக வெடித்தது. இந்த மோதலில் PSG அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் மற்றும் செல்லசீ வீரர் ஜோவோ பெட்ரோ ஆகியோர் நேரடியாக மோதிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், என்ரிக் பெட்ரோவின் முகத்தில் தாக்கி அவரைத் தள்ளுவது தெளிவாகத் தெரிகிறது.

இந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. செல்லசீ அணியின் பயிற்சியாளர் என்சோ மரேஸ்காவும் சண்டையை விலக்க ஓடிவந்தார். PSG கோல்கீப்பர் கியான்லூகி டோனரம்மா, என்ரிக்கை தடுத்து நிறுத்தியுள்ளார். ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போட்டி முடிந்த பிறகு, தனது செயல்கள் வேண்டுமென்றே இல்லை என லூயிஸ் என்ரிக் விளக்கமளித்துள்ளார். செல்லசீயின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இடையிலும், இந்த மோதல் சம்பவம் உலக கால்பந்து அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.