பிரிட்டன் நியூ- கார்சில் நகரில் சற்று முன்னர் 5 பொலிஸ் கார்கள் நசுங்கியுள்ளது, மேலும் ஒரு BMW காரும் என பல கார்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. காரணம் ஒரு BMW காரை பொலிசார் நிறுத்த முனைந்தவேளை அந்தக் கார் படு வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. நியூ-காசில் செல்லும் A1 நெஞ்சாலையில் இந்தக் கார் படு வேகமாகச் செல்ல, அதனை திரத்திப் பிடிக்க என மேலதிக பொலிஸ் கார் தேவைப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சுமார் 5 பொலிஸ் கார்கள் குறித்த BMW வாகனத்தை திரத்திக் கொண்டு இருக்கையில், திடீரென BMW வாகன ஓட்டுனர் வலது பக்கமாக இருக்கும் ஒரு வீதியை எடுக்க முற்பட்ட வேளை, அங்கே பெரும் விபத்து ஏற்பட்டது. படு வேகமாக வந்து கொண்டு இருந்த மேலும் 2 வாகனங்கள் பொலிஸாரின் கார்களோடு மோத.
மொத்தமாக 5 பொலிஸ் கார்கள் சப்பளிந்துள்ளது. இது இவ்வாறு இருக்க BMW வாகன ஓட்டுனர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் பொலிசார் என்பதனை பொலிஸ் வட்டாரங்கள் அறிவிக்கவில்லை.
இந்த சம்பவம் சற்று முன்னர்(புதன் கிழமை மதியம் 09/04/2025) நடைபெற்றுள்ளது. நியூ-காரில் செல்லும் ஏ1 பாதையில் டென்டன் என்னும் நகருக்கு அருகாமையில் இந்த பெரிய விபத்து நடந்ததால், முழு நெடுஞ்சாலையும் மூடப்பட்டு பெரும் விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.