Foreign leaders visit Ukraine: ரம்புக்கு பாடம் கற்பிக்க பல உலகத் தலைவர்கள் உக்ரைனுக்கு விஜயம் !

அமெரிக்க அதிபராக டொனால் ரம் பொறுப்பேற்ற பின்னர், அவர் உக்ரைன் தலைவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதற்கு முழுக் காரணம் ஈகோ தான். ரம் ஆட்சியில் இல்லாத அந்த 4 ஆண்டுகளில் உலகத் தலைவர்கள் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கி. இதனை ரம்பால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப் பழிவாங்குவதாக நினைத்து, ரம் முழு உக்ரைன் மக்களையும் பழிவாங்கிக்கொண்டு இருக்கிறார். இதுவே உண்மை ஆகும் !

தற்போது கூட ரஷ்ய அமெரிக்க பேச்சுவார்த்தையில், உக்ரைன் அதிபரை அழைக்க ரம் விரும்பவில்லை. மேலும் சொல்லப் போனால் உக்ரைன் நாட்டில் உள்ள மிக மிக அரியவகை கனிமங்கள் உள்ள இடத்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்று ரம் கேட்டுள்ளார். இன் நிலையில் ஐரோப்பிய தலைவர்கள், கனடா மற்றும் அவுஸ்திரேலிய தலைவர்கள் அனைவரும் உக்ரைன் நாட்டுக்கு விஜயம் செய்து, தமது ஆதரவை ஜிலன்ஸ்கிக்கு தெரிவிக்க உள்ளார்கள்.

இதனால் உக்ரைன் நாட்டுத் தலைவர் ஜிலன்ஸ்கியை மேலும் மரியாதைக்குரிய நபராக, மாற்ற உலகத் தலைவர்கள் முனைந்துள்ளார்கள். நான் தான் பிரச்சனை என்றால் சொல்லுங்கள் , நான் பதவியை ராஜினாமாச் செய்கிறேன் என்று கூட ஜிலன்ஸ்கி கூறும் அளவுக்கு, டொனால் ரம் ஜிலன்ஸ்கி மீது வெறுப்பில் உள்ளார். டொனால் ரம்பை பொறுத்தவரை நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போலத் தான்.

அதாவது செத்த வீட்டு என்றால் அங்கே நான் தான் பிணமாக இருக்க வேண்டும், கல்யாண வீடு என்றால் அங்கே நான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இதுவே அவரது கொள்கை. தன்னை விட யாராவது பிரபல்யம் ஆகிவிட்டால், உடனே அன் நபரை பழிவாங்க ரம் தவறுவதே இல்லை.