ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, தனது ராணுவத்தை பன் மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ரஷ்ய உக்ரைன் மீது படை எடுத்துள்ள நிலையில், ரஷ்யா ஜேர்மனியை தாக்கக் கூடும் என்ற நிலை தோன்றியுள்ளது. பல்டிக் கடல் வழியாக ரஷ்யா தனது ராணுவத்தை ஜேர்மனியில் உடனே தரை இறக்க முடியும்.
அத்தோடு மிகவும் பலம் இல்லாத நாடான ஒஸ்ரியாவை தாக்கி, அதனூடாக தரைப் படையை ரஷ்யா ஜேர்மனிக்கு உள்ளே அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் ஜேர்மன் அரசு தனது படைப் பலத்தை உடனடியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
முன்னர் ஜேர்மன் நாட்டில் இளைஞர்கள் 18 வயது ஆன உடனே கட்டாயமாக ராணுவத்தில் சேரவேண்டும் என்ற சட்டம் இருந்தது. அவர்கள் 2 ஆண்டுகள் வரை ராணுவத்தில் இருக்கவேண்டும். பின்னர் விலகிச் செல்ல முடியும். அல்லது தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற முடியும். அதனை ஜேர்மன் அரசு பின்னர் விலக்கி இருந்தது.
தற்போது மீண்டும் அந்த கட்டாய ராணுவ சேர்ப்பை, கொண்டுவருவது தொடர்பாக ஜேர்மன் அரசு மற்றும் ராணுவத் தளபதிகள் ஆராய்ந்து வருகிறார்கள் என்ற செய்தி தலை நகர் பேர்லினில் இருந்து கிடைத்துள்ளது.