பார்க ஏதோ விமானம் போலத் தான் இருக்கும், ஆனால் தனது இலக்கை தாக்கினால் தான் தெரியும் அங்கே ஒரு பூகம்பத்தையே இது ஏற்படுத்தும் என்றும். அப்படியான ஒரு ஏவுகணை தான் இந்த “”டோறஸ்”””. இது ஜேர்மனியின் தொழில் நுட்பத்தின் அடையாளம் என்றே சொல்லலாம்.
சுமார் 1,400KG எடை கொண்ட இந்த ஏவுகணை, ராடர் திரைகளில் வீழ்வது இல்லை. 5 மீட்டர் நீளம் கொண்டவை. 500Kம் வரை சென்று துல்லியமாக தனது இலக்கை தாக்கவல்லவை. SAAB கார் எஞ்சினை தயாரிக்கும் நிறுவனமே இந்த ஏவுகணையின் எஞ்சினையும் தயாரித்துள்ளது. அதனால் இவை மிகவும் வேகம் கொண்டவை.
இதனை விமானத்தில் பொருத்திச் சென்று ஏவவும் முடியும். தரையில் இருந்தும் ஏவ முடியும். அப்படியான வடிவமைப்பை கொண்டவை இந்த டோறஸ் ஏவுகணைகள். இதனை தற்போது உக்ரைனுக்கு கொடுக்க ஜேர்மனி சம்மதம் தெரிவித்துள்ளது.
GPS சாட்டலைட்டை பாவித்து தனது இலக்கை அடையும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, தாழ்வாகப் பறந்து சென்று ராடர் திரைகளில் மண்ணை தூவ வல்லது.