அனுராதபுர கற்பழிப்பு: நபரிடம் கை குண்டு இந்தது கண்டு பிடிப்பு !

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபரின் வீட்டில் கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டு தயாரிப்பு உயிருள்ள கையெறி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​தன்னிடம் கையெறி குண்டு இருப்பதாக அவர் வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையெறி குண்டு, “வதபதா” என்ற அலங்கார விசிறி மற்றும் பௌத்த துறவிகள் பயன்படுத்தும் கிண்ணம் ஆகியவற்றுடன் ஒரு பையில் கல்னேவ, எலப்பாராவில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.