பாக்கிஸ்தானுக்குள் நுளையப் போகும் இந்திய ராணுவம் ? பெரும் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் , பாக்கிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மறைவில் உள்ளார்கள். அவர்களை தேடி வீடு வீடாக இந்திய ராணுவம் சென்று வரும் நிலையில். சில இடங்களில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே பெரும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இது இவ்வாறு இருக்க இந்தியா தனது எல்லைகள் அனைத்தையும் மூடியுள்ளது.

இதனால் அந்த தீவிரவாதிகள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. ஒருவர் ஒருவராக இந்திய ராணுவம் அவர்களை வேட்டையாட உள்ள நிலையில். லக்ஷ்ர் ஈ தொய்பா என்ற அமைப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளது. இவர்களுக்கு பாக்கிஸ்தானில் முகாம்கள் உள்ளது. இதனால் இந்திய ராணுவம் பாக்கிஸ்தானுக்கு உள்ளே ஊடுருவி சர்ஜிக்ல் ஸ்ரைக் ஒன்றை மேற்கொள்ள கடும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் அவசராம அங்கிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வரும் நிலையில். விமான சேவை நிறுவனங்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பயணிகளிடம் மேலதிக பணத்தை அறவிட்டு வருகிறது. இதனை மத்திய அரசு கண்டித்துள்ளது.

தற்போது இந்தியாவில் மறைந்துள்ள பாக்கிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவரை என்றாலும், உயிரோடு பிடிப்பதே இந்திய ராணுவத்தின் ஒரே நோக்கமாக இருக்கிறது. அப்படி என்றால் தான் , அவர்கள் எப்படி இந்தியாவுக்குள் ஊடுருவினார்கள் ? யார் அனுப்பி வைத்தது ? முகாம்கள் எங்கே உள்ளது ? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் !