Update : 6.00Am Inidan Time: பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் சுமார் 9 இடங்களில் சற்று முன்னர் இந்திய வான் படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்கிஸ்தான் அரச அலுவலகங்கள் உட்பட தீவிரவாதிகளின் நிலைகள் என்று 9 இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதில் தாக்குதலை நீங்கள் விரைவில் எதிர்பார்கலாம் என பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதனால் போர் ஆரம்பித்து விட்டது என்பது உறுதியாகியுள்ளது.
இதற்கு ஓப்பரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயர் சூட்டியுள்ளது. இதனை அடுத்து இனி பாக்கிஸ்தான் எங்கே தாக்கும் என்பது தொடர்பாகவும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.