பாதுகாப்பு துறையில் இந்தியா சாதனை – ஏற்றுமதி வருவாயில் வரலாறு காணாத வளர்ச்சி!

இந்தியாவின் பாதுகாப்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி 1.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 174% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வளர்ச்சி, “மேக் இன் இந்தியா” திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி வருவாய் 21,083 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு தசாப்தத்தில் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், 2029 ஆண்டுக்குள் பாதுகாப்பு உற்பத்தியை 3 கோடி ரூபாவாகவும், ஏற்றுமதியை 50,000 கோடி ரூபாவாகவும் அதிகரிக்க அரசு இலக்கு வைத்துள்ளது.

இந்த உயர்வால், இந்தியா ஒரு உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாறும் நோக்கில் வலுவாக முன்னேறி வருகிறது.