அமெரிக்காவில் உள்ள நடுத்தர பெற்றோர்களால், தமது பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை இனி வாங்க முடியாது. ஏன் என்றால் அதன் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது என்று வெளிப்படையாக , மற்றும் ஒரு பைத்தியக் காரன் போல தெரிவித்துள்ளார் ரம்.
அதிபர் ரம் விதித்த வரியால், அமெரிக்காவில் தற்போது சீன தயாரிப்பு பொருட்கள் சந்தையில் இல்லை. மேலும் சொல்லப் போனால் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ரம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன்: மீண்டும் பதவியேற்ற முதல் 100 நாட்களில் தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆனால், தான் விதித்துள்ள வரிகள் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பொம்மைகளை வாங்குவதை குறைக்க வேண்டியிருக்கலாம் என்றும், இது ஒரு பெரிய விஷயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்த கருத்துக்கள் அமெரிக்க மக்களிடையே வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன!