2025-ல் வரும் iPhone 17: இது வரை இல்லாத 5 புதிய அம்சங்கள்!

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த iPhone மாடலான iPhone 17–ல் கடந்த ஆறு தலைமுறைகளை ஒப்பிடும் போது மிகுந்த முன்னேற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. புதிய வடிவமைப்புடன் கூடிய இக்கைப்பேசி, தொழில்நுட்பத்தில் பல புதிய அம்சங்களை கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான 5 மாற்றங்களை இங்கே காணலாம்:

 1. இரட்டை அமைப்புடன் புதிய வடிவமைப்பு

புளூம்பெர்க் செய்தியாளரான மார்க் குர்மனின் தகவலின்படி, iPhone 17-ல் முழு கிளாஸ் பதிலாக மெட்டல் மற்றும் கிளாஸ் கலந்த வடிவமைப்பு அமையும். புதிய டைட்டானியம் அலாய் ஃபிரேமை பயன்படுத்துவதன் மூலம் iPhone 17 அதிகத்திறன் மற்றும் பலத்துடன் இருக்கும். கேமரா பகுதியில் மெட்டல் சுற்றியுள்ள அமைப்பும் சேர்க்கப்படும். அதோடு, Ultra-Thin Glass (UTG) டிஸ்ப்ளே பயன்பாட்டால், மொபைல் இன்னும் மெல்லியதும் மென்மையுமானதுமாக இருக்கும்.

 2. அதிக செயல்திறன் கொண்ட புதிய A19 சிப்

TSMC நிறுவனத்தின் 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் புதிய A19 சிப், வேகமான செயல்பாடு மற்றும் சிறந்த மின்சக்தி மேலாண்மையை வழங்கும். இதன் மூலம் பாஃபரி ஆயுள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப புதிய அம்சங்களை ஆதரிக்கக்கூடியதாகவும் இந்த சிப் அமையும்.

 3. மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள்

iPhone 17-ல் 48MP பிரதான கேமரா தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. ஆனால், உல்ட்ராவைட் கேமரா 12MP-இல் இருந்து 48MP ஆக மேம்படுத்தப்படும். போர்ட்ரைட் மோட் மற்றும் நைட் மோடில் புதிய மேம்பாடுகள் இடம்பெறும் எனவும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 24MP முன் கேமரா பயன்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 4. ProMotion டிஸ்ப்ளே – சாதாரண மாடல்களுக்கும்

முந்தைய ஆண்டுகளுக்கு மாறாக, இந்த ஆண்டு iPhone 17-இன் சாதாரண மாடல்களிலும் 120Hz ProMotion டிஸ்ப்ளே அமைய வாய்ப்பு உள்ளது. MicroLED டெக்னாலஜியை கொண்டு உருவாகும் இந்த டிஸ்ப்ளே, குறைந்த சக்தி பயன்படுத்தும் சிறப்பியல்புடன் வரும். இதனால், பேட்டரி ஆயுள் அதிகரிக்கும், உடன் பன்இன் பிரச்சனை குறையும்.

 5. பேட்டரி மற்றும் MagSafe மேம்பாடுகள்

புதிய சிப் மற்றும் வெப்ப நிர்வாக அமைப்பின் காரணமாக, iPhone 17 அதிக நேரம் பேட்டரியை நிலைத்திரக்கக்கூடும். அதோடு, MagSafe இணைப்புத்தன்மையும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.