ஈரானின் 1,200KM தூரம் செல்லும் ஏவுகணை -உலகை உலுப்பும் விடையம் !

ஈரான் புதிய ஏவுகணை அறிமுகம்! அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்படும் என மிரட்டல் – பதட்டம் அதிகரிப்பு!

தெஹ்ரான்: மேற்கத்திய நாடுகளுடன் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் 1,200 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய புதிய திட எரிபொருள் ஏவுகணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது! இது ஈரானின் சமீபத்திய பாதுகாப்பு சாதனை என அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

“காசெம் பசீர்” (Ghassem Basir) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, குறைந்தபட்சம் 1,200 கி.மீ. தூரம் தாக்கும் திறன் கொண்டது. ஈரானின் இந்த ஏவுகணைத் திறன்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேலுக்கு எதிரான ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுக்கு ஈரான் ஆதரவளித்து வரும் நிலையில், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே, “நாம் தாக்கப்பட்டால், வலுவாக பதிலடி கொடுப்போம். அமெரிக்க தளங்களே எங்கள் இலக்குகள்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்கள் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த புதிய ஏவுகணை அறிமுகம் மத்திய கிழக்கில் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது!