ChatGTP போல செயலியை பாவித்து அனைத்து பாலஸ்தீன மக்களின் DATA திரட்டும் இஸ்ரேல் அரசு

பேஸ் புக், இன்ஸ்டா தொடக்கம் அனைத்து செயலிகளும்(APP) மக்களை உளவு பார்கவே அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். எமக்கு தெரிந்தோ இல்லை தெரியாமலோ எம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்தச் செயலிகள் வேவுபார்த்து வருகிறது என்பது உண்மை தான்.

அந்த வகையில் சாட் GTP போல பாலஸ்தீன மொழியில், ஒரு செயலியை செய்துள்ளது இஸ்ரேலிய ரானுவம். இதனை பாவனையில் விட்டால், உடனே பல லட்சம் பாலஸ்தீனியர்கள் இதனை பாவிக்க ஆரம்பிப்பார்கள். அதனூடாக தேவையான அனைத்து தகவல்களையும் இஸ்ரேல் ராணுவம் பெற்றுவிடும்.

ஆனால் யாரும் எதிர்பார்காத வகையி, இந்த விடையம் கசிந்து விட்டதால், இஸ்ரேல் ராணுவம் திணறி வருகிறது. இருப்பினும் இஸ்ரேல் இதனை வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஹமாஸ் பாவிக்கும் பேஜர்களில் குண்டைப் பொருத்தி, ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து பல சிலீப்பர் செல்களை போட்டுத் தள்ளியது இஸ்ரேல். அது போலவே பெரும் நரித்தனமான வேலையில் இறங்கியுள்ளது இஸ்ரேல்.