அதிர்ச்சியான உளவுத் தகவல்: போரை உடனே நிறுத்துமாறு மோடிக்கு JD-வான்ஸ் தெரிவித்தார் !

அமெரிக்க உளவுத் துறைக்கு கிடைத்த அவசர மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை அடுத்து, அமெரிக்க துணை ஜனாதிபதி மோடிக்கு தொலைபேசி அழைப்பை விடுத்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்தே நரேந்திர மோடி , உடனே போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஒப்புகொண்டுள்ளார். கிடைத்த புலனாய்வுத் தகவல் என்ன என்பதை அமெரிக்க அரசு சொல்ல மறுத்துவிட்டது.

ஆனால் இது சீன சம்பந்தப்பட்ட விடையம் என்பது தெளிவாகப் புரிகிறது, என்று அமெரிக்க செய்திச் சேவை CNN தெரிவித்துள்ளது. எப்படி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தவேளை, உடனே ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து , ரஷ்யாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதோ. அதே பாணியில் இந்தியா பாக்கிஸ்தானை தாக்க ஆரம்பித்தவேளை. சீனா இடயே புகுந்து, பெரும் சதித் திட்டம் ஒன்றை தீட்டியதாக அமெரிக்க புலனாய்வுத் துறை அறிந்துள்ளது.

ஏற்கனவே இந்திய விமானப்படையின் பலத்தை கணக்கிட்டு, சீனா தனது மிகவும் அதி நவீன போர் விமானமான J10C விமானத்தை பாக்கிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இதனைப் பாவித்தே இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டது , பாக்கிஸ்தான். இது போல மேலும் சில ஆயுதங்களை பாக்கிஸ்தானுக்கு இலவசமாக வழங்க சீனா முன்வந்துள்ளது, இதில் பாரிய அழிவை ஏற்படுத்தும், ஏவுகணைகளும் அடங்கும்.

இந்தியா சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யாவுக்கு கொடுத்து S400 என்னும் வான் பாதுகாப்பு தளத்தை வாங்கியது. அதுவே இன்றுவரை இந்தியாவை ஒரு இரும்புக் கோட்டையாக பாதுகாத்து வருகிறது. ஆனால் அதனை பராமரிப்பது என்பது மிக மிக செலவான விடையம். அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மிக மிக விலை உயர்ந்தவை. இந்த S400 வான் பாதுகாப்பு கட்டமைப்பில் சிக்காமல் , சென்று தாக்க வல்ல ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளது.

இதனை சீனா பாக்கிஸ்தானுக்கு கொடுக்க முன்வந்த தகவல், அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு உடனே தெரிந்ததால் தான், அமெரிக்க துணை ஜனாதிபதி மோடிக்கு அழைப்பை விடுத்தார் என்கிற செய்திகள் கசிந்துள்ளது. அதாவது இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் வேளை, தனது அண்டை நாட்டை வைத்து, எதிரி நாட்டை நாசமாக்க சீன போட்ட திட்டம் தவிடு பொடியாகியுள்ளது.