பிரிட்டனில் தனியாக இயங்கி வந்த சுகாதார சேவைப் பிரிவை)NHS), கலைத்து அதனை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார் பிரதமர் கியர் ஸ்டாமர். இது நாள் வரையும் NHS தனியாக இயங்கி வந்தது. அதில் பெரும் குறைப்பாடுகளும் இருந்து வந்தது.
குறிப்பாக அதில் வேலை பார்க்கும் சில முக்கிய உறுப்பினர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் பெற்று வந்தார்கள்.
தாம் என்ன நினைக்கிறார்களே அதனையே அவர்கள் நிறைவேற்றியும் வந்தார்கள். இன் நிலையில் சுகாதார சேவைப் பிரிவில்(NHS), மக்களுக்கு பெரும் அதிருப்த்தி இருந்து வந்தது. குறிப்பாக, ஆபத்து இல்லாத நோய் தாக்கம் இருந்தால், அதற்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் காலம் என்பது வெகுவாக அதிகரித்து.
சில சிகிச்சைகளுக்கு 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. சில வகையான புற்று நோய்க்கு கூட 3 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை தற்போது லண்டனில் காணப்படுகிறது.