Killing Field documentary எடுத்த காலம் மக் ரே ஆனந்தி அக்காவுக்கு அஞ்சலி

கொலைக் களம்(killing Field) என்ற ஆவணப் படத்தை எடுத்து, சனல் 4 TV ல் ஒளிபரப்பி, மகிந்த அரசின் இன அழிப்பை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் காலம் மக் ரே. அவர் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக தற்போது புது ஆவணப் படம் ஒன்றை எடுத்தும் வருகிறார். இதேவேளை BBC தமிழேசையில் பணியாற்றி, பின்னர் பல ஊடகவியலாளர் அமைப்பில் இருந்த “”தேச அபிமானி”” BBC ஆனந்தி அக்காவுக்கு, காலம் மக் ரே தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அதிர்வு இணையத்தை தொடர்பு கொண்ட காமல் மக் ரே, ஆனந்தி அக்கா மறைவு தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். மேலும் வரும் சனிக்கிழமை(08) ஹரோ நகரில், ஆனந்தி அக்காவுக்கான வணக்க நிகழ்வு நடைபெறவுள்ள விடையத்தையும் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

இதேவேளை France ஊடக அமைப்பு, இந்திய ஊடகவியலாளர்கள், பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகவியலாளர்கள் என, பல்லின ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு ஹரோவில் 8ம் திகதி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள் , செயல்பாட்டாளர்கள், பிரித்தானிய MPக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மக்களாகிய நீங்களும் இன் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும். கீழே முழு விபரங்களும் உள்ளது. 1970களில் இருந்து BBCல் பணியாற்றி, தேசிய தலைவரை பேட்டி எடுத்த ஈழத்து தமிழ் ஊடகவியலாளர் “”தேச அபிமானி”” ஆனந்தி அக்காவின் நினைவு தினத்தில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.