போதுமடா சாமி… என்று சொல்லும் அளவுக்கு வட கொரிய அதிபர் செய்யும் அட்டகாசத்தை தாங்கவே முடியவில்லை. நேற்று முன் தினம் வட கொரிய அதிபர் கிம்-ஜொன் , பெரும் ஸ்னைப்பர் துப்பாக்கியால் சுடுவது போல ஒரு போட்டோவை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் அருகில் நிற்க்கும் அதிகாரியை பாருங்கள். அவர் முக பாவம் என்ன சொல்கிறது என்று. அதிபர் கிம் ஜொன் உண்மையில் அதனை சுடவில்லை. வெறும் போட்டோ ஷூட் ஒன்றையே நடத்தியுள்ளார்.
உலகில் வடகொரியா மாதிரி ஒரு நாட்டை பார்கவே முடியாது. அன் நாட்டு மக்கள் வெளிநாடு செல்ல தடை! அங்கேயே பிறந்து அங்கேயே இறக்க வேண்டியது தான். இன்ரர் நெட் கிடையாது. அதாவது வட கொரியா அரசு கொடுக்கும் இன்ரர் நெட் மட்டுமே இயங்கும். அவர்கள் வெளி உலக தொடர்பை ஏற்படுத்த முடியாது. பேஸ் புக் தொடக்கம் இன்ஸ்டா வரை தடை. கூகுள் தேடு பொறிக்கு தடை. அது போக சர்வதேச TVயை பார்க்க முடியாது.
வட கொரிய தேசிய தொலைக்காட்சியை மட்டுமே பார்க முடியும். அவர்கள் சொல்வது தான் செய்தி. இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடு. ஏன் வட கொரியாவில் பிறந்தோம் என்று அன் நாட்டு மக்கள் நினைக்கும் அளவு கட்டுப்பாடு உள்ளது. உண்மையில் சொல்லப் போனால் அமேசன் காடுகளில், நவீன மக்கள் தொடர்பு இன்றி வாழும் காட்டு வாசி இனத்தைப் போலவே வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த லட்சனத்தில் அன் நாட்டு அதிபர் போட்டோ ஷூட் நடத்தி அதனையும் தொலைக்காட்சியில் போட மக்கள் ஆஹா ஓ ஹோ என்று அவரைப் பற்றி நினைப்பார்கள். அவர் ஒரு நல்லவர் வல்லவர் என்று. இப்படித் தான் இத்தனை ஆண்டுகள் ஏமாற்றி பிழைப்பை நடத்துகிறார் கிம் ஜொன் …