கனடாவை அசைக்க முடியாது நாங்கள் பாதுகாப்போம்: இளவரசர் சார்ளஸ் !

ஒட்டாவா, கனடா, மே 27, 2025: கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை, பல உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, பிரித்தானிய முடியாட்சியை இது அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில், கனடா இன்று வரை, தனது நாட்டின் முதன்மைத் தலைவராக பிரித்தானிய அரச குடும்பத்தையே வைத்துள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தின் செங்கோலின் கீழ் தான் கனடா சுயாட்சி முறையில் இயங்கி வருகிறது.


வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: மன்னர் சார்லஸின் கன்னி உரை!

இந்த நிலையில், மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஒன்று இன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது. இதனை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. இன்று கனடாவில் முதன்முறையாக பாராளுமன்றம் கூடிய நிலையில், புதிதாகத் தெரிவாகியுள்ள பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), பிரித்தானிய மன்னர் சார்லஸ் III ஐ கன்னி உரையாற்ற அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மன்னர், இன்று கனடா சென்றுள்ளார்.


டிரம்புக்குப் பதிலடி கொடுப்பாரா மன்னர்?

கனேடிய பாராளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் ஒரு மிகவும் காத்திரமான உரை நிகழ்த்த உள்ளார். பிரித்தானியப் பேரரசின் கீழ் தான் கனடா பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார் என்றும், டொனால்ட் டிரம்ப் கூறிய வார்த்தைகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்றும் அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.


உலகத் தலைவர்களின் எதிர்பார்ப்பு!

இதனால், பிரித்தானிய மன்னர் சார்லஸ் என்ன உரையாற்றப் போகிறார் என்பதை வெள்ளை மாளிகை தொடக்கம் பல நாட்டுத் தலைவர்கள் வரை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உரை, கனடா-அமெரிக்கா உறவுகள் மற்றும் பிரித்தானிய முடியாட்சியுடனான கனடாவின் பிணைப்பு ஆகியவற்றில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலதிக செய்திகள் இது தொடர்பாக விரைவில் வெளியாக உள்ளன.