லேபர் MP மீது பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை ! பெரும் அரசியல் பழிவாங்கல் !

பிரித்தானியாவில் ஆட்சியில் இருக்கும் லேபர் கட்சியின் முக்கிய MP யான டியூலில் சாதிக் மீது பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 2 நாட்கள் கடந்த நிலையில். பிடியாணையை பாவித்து Interpol பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்க உள்ளதாக பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

MP டியூலில் சாதிக்கின் உறவினர் (Sheikh Hasina Wazed) பங்களாதேஷின் முன்னாள் பிரதமராக இருந்துள்ளார். அவரைப் பாவித்து , 3 நிலங்கை பங்களாதேஷில் கைப்பற்றியுள்ளார் டியூலிப் என்பதே தற்போதைய அரசின் குற்றச்சாட்டு ஆகும். இந்த வழக்கு பங்களாதேஷ் உச்ச நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தற்போது உந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த, MP டியூலிப் இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்று கூறியுள்ளார். தனது உறவினர், பிரதமராக இருந்து தற்போது பதவி விலகிய நிலையில். அவரையும் தன்னையும் பழி வாங்க பங்களாதேஷ் அரசு முனைவதாக டியூலிப் தெரிவித்துள்ளார்.